கிளிநொச்சியில் விவசாயிகளுக்கான முதற்கட்ட கொடுப்பனவு
கிளிநொச்சி (Kilinochchi) மாவட்ட விவசாயிகளின் வங்கி கணக்குகளில் பெரும் போகத்திற்கான முதற்கட்ட கொடுப்பனவாக 127.191 மில்லியன் ரூபா நிதி வைப்பிலிடப்பட்டுள்ளது
2024 /2025 பெரும் போக பயிர் செய்கை மேற்கொண்டுள்ள விவசாயிகளுக்கான உரமானியத்திற்கான கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு வருகிறன.
9064 விவசாயிகள்
அந்த அடிப்படையில் கிளிநொச்சி மாவட்டத்தில் பெரும் போக நெற்செய்கை மேற்கொண்டுள்ள 9064 விவசாயிகளுக்கு முதற்கட்டமாக 127.191 மில்லியன் ரூபா வங்கி கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ளது.

பூநகரி, இராமநாதபுரம், புளியம்பக்கணை, பரந்தன், கண்டாவளை, முழங்காவில், பளை, கிளிநொச்சி ஆகிய கமநல சேவை நிலையங்களின் கீழ் உள்ள குறித்த செய்கை மேற்கொண்ட விவசாயிகளுக்கே வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
உயிர் கொல்லும் குளிர்... மின்வெட்டால் 600,000 பேர் அவதி: ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து News Lankasri
விருந்தில் ஏற்பட்ட சண்டை.. வெளிவந்த உண்மையால் கோபத்தில் பாண்டியன்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரோமோ வீடியோ Cineulagam