உலக வரைபடத்தில் அழிவின் விளிம்பில் முக்கிய நாடு! நெருக்கும் பெரும் ஆபத்து
புவியியல் ரீதியாக இஸ்ரேல் என்பது ஒரு மிகச் சிறிய நாடு.
இஸ்ரேலின் எல்லைகளில் இருக்கின்ற அத்தனை நாடுகளுமே இஸ்ரேலை எந்த நேரமும் விழுங்கி ஏப்பமிடத் துடித்துக்கொண்டிருக்கின்ற அதனது பரம வைரிகள்.
இஸ்ரேல் என்கின்ற ஒரு நாடு உலக வரைபடத்தில் இருந்து முற்றாகவே அழிக்கப்படுவதை தமது ஒரு தரிசனமாக நினைத்துச் செயற்பட்டுக்கொண்டிருக்கின்ற 28 நாடுகள் இந்தப் பூமிப்பந்தில் இருக்கின்றன. அவற்றில் பல நாடுகள் பலிஸ்டிக் மிசைலஸ், அணு ஆயுதங்களை தம்வசம் வைத்திருக்கின்ற நாடுகள்.
எந்த நிமிடமும் இஸ்ரேல் மீது அழிவின் ஆயுதங்களை ஏவி இஸ்ரேலை முழுவதுமாகவே அழித்துவிட தருணம் பார்த்துக்கொண்டிருக்கின்ற நாடுகள்.
இஸ்ரேலுக்கு - வெளியில் இருந்துதான் அபத்து என்றில்லை. நாட்டுக்குள்ளேயே பல எதிரிகள். 10 இற்கும் மேற்பட்ட போராட்டக் குழுக்கள்.
எந்த நேரமும் வெடித்துச் சிதறிவிடக்கூடிய ஒரு பூகம்பத்தின் மீது நின்றுகொண்டிருக்கின்ற இஸ்ரேல், எப்படியான ஆயுதங்களைத் தரித்து தன்னை பாதுகாத்துக்கொண்டிருக்கின்றது என்பது பற்றிய பார்வையே இந்த ‘உண்மையின் தரிசனம் ஒளியாவணம்.