வெகுசன ஊடக அமைச்சின் வழிநடத்தலில் தகவல் அறியும் உரிமை தொடர்பான செயலமர்வு (Photos)
வெகுசன ஊடக அமைச்சின் வழிநடத்தலில் தகவல் அறியும் உரிமை தொடர்பாக அரசாங்க நிறுவனங்களின் தலைவர்களை அறிவூட்டும் இரு நாள் செயலமர்வு இடம்பெற்றுள்ளது.
வெகுசன ஊடக அமைச்சின் வழிநடத்தலில் ஏப்ரியல் இளைஞர் வலையமைப்பின் நிதியுதவியில் 2016ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க தகவலறியும் சட்டம் தொடர்பில் அரசாங்கத்தின் அனைத்து அமைச்சுக்கள் மற்றும் அதன் கீழ் இணைக்கப்பட்ட நிறுவனங்களின் தகவல் உத்தியோகத்தர்கள் 100 பேரிற்கு தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து தெளிவுபடுத்தும் இருநாள் செயலமர்வு 2021 நவம்பர் மாதம் 29 மற்றும் 30ஆம் திகதிகளில் கொழும்பு ஹோட்டலில் நடைபெற்றுள்ளது.
இதன்போது கருத்து தெரிவித்த வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் ஜகத் பீ.ஜயவீர,
அரசு மற்றும் பிரஜைகளிற்கிடையே தகவல் பரிமாறப்படுவதன் மூலம் அரசானது தமது பிரஜைகளுக்கு சேவை செய்வதற்கான சமூக பொறுப்பை வெளிப்படையாக செய்வதற்காக தகவல் சட்டத்தை பயன்படுத்தல் தொடர்பில் அனைத்து அரச உத்தியோகத்தர்களையும் தெளிவுபடுத்தல் மற்றும் அதற்கான தீர்வு தகவல் சட்டத்தை தொடராக ஏற்புடையதாக்குவதன் ஊடே மேற்கொள்ள முடியும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிகழ்வு வெகுசன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெருமவின் (Dullas Alahapperuma) அறிவுறுத்தலின்பேரில் அமைச்சின் செயலாளர் ஜகத் பீ.விஜேவீர (Jagath P. Wijeweera), வெகுசன ஊடக அமைச்சின் மேலதிக செயலாளர் மற்றும் தகவல் அறியும் ஆணைக்குழுவின் பதில் கடமை பணிப்பாளர் நாயகம் ருவன் சத்குமார (Ruwan Satkumara) ஆகியோரின் தலைமையிலும் வெகுசன ஊடக அமைச்சின் தகவல் உரிமை பிரிவின் சிரேஸ்ட்ட உதவிச்செயலாளர் எஸ்.டி.என்.எஸ்.ஜயசேன (S.T.N.S.Jayasena) மற்றும் எப்ரியல் இளையோர் வலையமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் இசாரா மதுவந்தியின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றிருந்தது.
இதில் வளவாளர்களாக தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் பியதிஸ்ஸ ரணசிங்க மற்றும் சட்டத்தரணி ஜகத் லியனாரச்சியும் கலந்து கொண்டனர்.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |




உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 2 நாட்கள் முன்

நிலாவை காப்பாற்ற சென்ற சோழன் அப்பாவிற்கு ஏற்பட்ட சோகம்.. அய்யனார் துணை அடுத்த வார பரபரப்பு புரொமோ Cineulagam

அமெரிக்கா-துருக்கி AMRAAM ஏவுகணை ஒப்பந்தம்: இந்தியாவின் பாதுகாப்பிற்கு புதிய அச்சுறுத்தலா? News Lankasri
