பத்மே பற்றி இதுவரை மறைக்கப்பட்ட சில திடுக்கிடும் தகவல்கள்!
இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட கெஹெல்பத்தர பத்மே, தனக்கென்று ஒரு போதைப்பொருள் இராஜ்ஜியத்தை உருவாக்கும் முனைப்புடன் செயற்பட்ட ஒருவராவார்.
தன்னுடைய போதைப்பொருள் சாம்ராஜ்யத்திற்காக ஒரு கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்பதில் இவர் குறியாக இருந்துள்ளார்.
இதற்காக ஐஸ் போதைப்பொருளை உற்பத்தி செய்யக்கூடிய தொழிற்சாலைகளை கூட இவர் இலங்கையில் உருவாக்கியிருந்தார்.
1970களின் இறுதிப்பகுதியில் பத்மேவின் தந்தை ஒரு கொலைக்குற்றச்சாட்டு தொடர்பில் சிறைக்கு சென்று மீண்டும் விடுதலையாகி திருந்தி வாழ முடிவு செய்துள்ளார்.
அப்போது பத்மேவின் பெயர் பத்மஸ்ரீ ஆகும். சில காலங்களுக்கு பின்னர் பத்மேவின் தந்தையான நெஹல் பெரேராவுக்கும் அவரது நண்பரான வர்த்தகர் ஒருவருக்கும் கொலை அச்சுறுத்தல் ஏற்படுகின்றது.
இதனையடுத்து, பத்மேவின் தந்தை கணேமுள்ள சஞ்சீவவால் சுட்டு கொல்லப்பட்டார். தந்தையின் மரணத்திற்கு பழி தீர்க்க வேண்டும் என பத்மே, அப்போதே முடிவு செய்கின்றார்.
அதன்பின்னர் பல ஆண்டுகளுக்கு பின்னர் கணேமுள்ள சஞ்சீவ, கெஹெல்பத்தர பத்மேவின் வழிநடத்தலில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது இன்றைய அதிர்வு நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

பாரதி கண்ணம்மா, கல்யாணம் முதல் காதல் வரை குழந்தை நட்சத்திரங்களை நியாபகம் இருக்கா?... எப்படி உள்ளார்கள் பாருங்க, வீடியோ Cineulagam

ஈஸ்வரிக்கு ஆபத்து.. திருமண பிரச்சனைக்கு நடுவில் அடுத்த ஷாக்! எதிர்நீச்சல் தொடர்கிறது ப்ரோமோ Cineulagam
