கச்சதீவு சர்ச்சைக்குரிய விடயமாக மாறியபோது முன்வைக்கப்பட்ட ஆலோசனை
கலைஞர் மு.கருணாநிதி (M. Karunanidhi) எழுதிய பராசக்தி என்ற தமிழ்த் திரைப்படத்தில், “வங்காள விரிகுடா நீர் ஏன் உப்பாக இருக்கிறது?” என்ற கேள்வியை கதாநாயகன் முன்வைத்து, அதற்கு அவரே அளிக்கும் பதிலில் “அது கடல் கடந்த தமிழர்களின் கண்ணீர்” என்று கூறுகிறார்.
இதனை சென்னையில் அமைந்துள்ள தென்கிழக்காசிய கற்கைகளுக்கான நிலையத்தின் பணிப்பாளர் வீ.சூரியநாராயணன் (V. Sooriyanarayanan) தமது கச்சதீவு தொடர்பான கட்டுரையில் கோடிட்டுள்ளார்.
1990களின் தொடக்கத்தில், கச்சதீவு (Kachchatheevu) சர்ச்சைக்குரிய விடயமாக மாறியபோது, தாம் ஒரு ஆலோசனையை முன்வைத்ததாக சூரியநாராயணன் குறிப்பிட்டுள்ளார்.
கடற்றொழிலாளர் பிரச்சினை
கச்சதீவை நிரந்தரமாக குத்தகைக்கு திரும்பப் பெறவும் இதன் மூலம் தமிழக கடற்றொழிலாளர்கள் கச்சதீவு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடற்றொழிலில் ஈடுபட முடியும் என்று அந்த முன்மொழிவு அமைந்திருந்தது. இதனை திராவிட முன்னேற்றக்கழகம் மற்றும் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் என்பன ஏற்றுக்கொண்டுள்ளன.
இந்த நிலையில் குறித்த யோசனை கச்சதீவுக்கு இனி பொருத்தமில்லை. இருப்பினும் தமிழக கடற்றொழிலாளர்கள் இலங்கைக் கடற்பரப்பிற்குள் ஆழமாகச் செல்வதும், அடிமட்ட விசைப்படகுகளைப் பயன்படுத்துவதும் தான் தற்போதைய பிரச்சினைகளாக உள்ளது என்று சூரியநாராயணன் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒவ்வொரு நெருக்கடியும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது. இதன்மூலமே தற்போதைய புதைகுழியில் இருந்து வெளிவர முடியும்.
பாக்கு நீரிணை ஆணையம்
மேலும், கடற்றொழிலாளர்களின் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க இந்தியா உடனடியாக இழுவைப்படகுகளை தடை செய்ய வேண்டும். கடற்றொழில் நிபுணர்கள், கடற்றொழிலாளர் பிரதிநிதிகள், கடற்படை மற்றும் கடலோர காவல்படை மற்றும் இரண்டு நாட்டு அரசுகளின் பிரதிநிதிகள் அடங்கிய பாக்கு நீரிணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும்.
இதன் மூலம் கடல் வளங்களை வளப்படுத்த இரண்டு நாடுகளும் கூட்டு முயற்சிகளை மேற்கொள்ளட்டும். இலங்கை கடற்றொழிலாளர்கள் பால்குடாவில் மூன்று நாட்கள் மீன்பிடிக்கட்டும். இதேவேளை இந்திய கடற்றொழிலாளர்கள் மூன்று நாட்கள் மீன்பிடிக்கட்டும் ஒரு நாள் விடுமுறையாக இருக்கட்டும்.
இந்தநிலையில் ஒன்றாக பந்தயத்தில் வெற்றி பெறுவோம் என்று குறிப்பிட்டுள்ள சூரியநாராயணன், இதேபோன்ற அணுகுமுறையே இந்தியாவின் அண்டை நாடுகளின் கொள்கைக்கு வழியாக அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |