இலங்கையின் (Sri Lanka) சனத்தொகை
ஒரு இலட்சத்து நாற்பத்து நாலாயிரத்தால் குறைவடைந்துள்ளதாக மத்திய வங்கியின்
அறிக்கை ஒன்று கூறுவதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும்
புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரள (Vasantha Athukorala) தெரிவித்துள்ளார்.
பத்து ஆண்டுகளில் மக்கள் தொகை எதிர்மறையான வளர்ச்சியைக் காட்டுவது இதுவே முதல்
முறை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மக்கள்தொகை குறைவின் சதவீதம் பூச்சியம் மற்றும் ஆறு சதவீதம் ஆகும்.
இதன்படி பெண் சனத்தொகை எழுபதாயிரமும், ஆண் சனத்தொகை எழுபத்து நாலாயிரமும் ஆக குறைவடைந்துள்ளதாக அத்துகோரள குறிப்பிட்டுள்ளார்.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான காலை நேர செய்திகளின் தொகுப்பு..
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW
|