மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்
மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து மீள ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும், அத்தியாவசிய காரணங்கள் அல்லாமல் வேறு காரணங்களுக்காக மாகாண எல்லைகளை கடக்கும் நபர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கடந்த தினங்களில் மாகாண எல்லையை கடந்து செல்ல முற்பட்ட பலர் திருப்பி அனுப்பப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து அரச பணியாளர்களுக்கு மாத்திரமே திறக்கப்பட்டுள்ளது.
மருத்துவ சிகிச்சை பெறுபவர்கள் மற்றும் நெருங்கிய உறவினரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளவுள்ளவர்கள் மாகாண எல்லைகளைக் கடக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
எனவே அத்தியாவசியமற்ற நடவடிக்கைகளுக்காக மாகாணங்களுக்கு இடையே விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகள் கோவிட் தொற்று பரவுவதைத் தடுப்பது தொடர்பில் மறு அறிவித்தல் வரும் வரை அமுலில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாகாணங்களின் நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களின் நகர்வுகளை தொடர்ந்து கண்காணிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், இன்று புதன்கிழமை சுமார் 50 வாகனங்களுடன் பயணக்கட்டுப்பாடுகளை மீறிய 100 க்கும் மேற்பட்டோர் மாகாண எல்லைகளில் திருப்பி அனுப்பப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
அணையா விடுதலைத்தீ சங்கரின் சாவு எப்படி வீரசரித்திரமானது.. 10 மணி நேரம் முன்
விசா நிராகரிப்பால் உயிரைவிட்ட இந்திய மருத்துவர்! சிதைந்த அமெரிக்க கனவு..சிக்கிய கடிதம் News Lankasri
வெட்ட வந்த அறிவுக்கரசி, கடும் ஷாக்கில் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
பள்ளி செல்லும் அகதிப் பிள்ளைகளை தங்கள் நாட்டுக்கு போகும்படி கூறுவதால் உருவாகியுள்ள கலக்கம் News Lankasri