சீமெந்து தட்டுப்பாடு குறித்து வெளியான தகவல்
நாட்டில் சீமெந்துக்கான தட்டுப்பாடு இன்னும் எவ்வளவு காலத்திற்கு நீடிக்கும் என்பது குறித்து சீமெந்து இறக்குமதியாளர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
நாட்டில் தற்பொழுது நிலவி வரும் சீமெந்துக்காக தட்டுப்பாடு இன்னும் இரண்டு மாதங்களுக்கு நீடிக்கும் என தெரிவித்துள்ளனர்.
இரண்டு நாட்களில் இதனை நிறுத்த முடியாது எனவும், குறைந்தபட்சம் இரண்டு மாதங்கள் தேவைப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
டொலர் பிரச்சினையே சீமெந்து தட்டுப்பாட்டுக்கான காரணம் எனவும், சிறியளவு விலை அதிகரிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
போதியளவு சீமெந்து கிடைக்கப் பெறுவதில்லை என வர்த்தகர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். 100 மூடை சீமெந்து கிடைத்தாலும் 10 நிமிடங்களில் அது விற்றுத் தீர்வதாகத் தெரிவித்துள்ளார்.
சீமெந்துக்கான தட்டுப்பாடு காரணமாக , கட்டுமானத்துறையில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருவோர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.





வெளிநாடொன்றில் பிரபல இந்திய தம்பதி விபத்தில் பலி: பிள்ளைகள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி News Lankasri

கணவர் இறந்த பின்னரும் தாலியுடன் இருக்கும் பிரியங்கா- அவ்வளவு பிரியம்.. நாஞ்சில் விஜயன் ஓபன் டாக் Manithan
