பொலிஸ் மா அதிபரது வெற்றிடம் தொடர்பில் வெளியாகிய மற்றுமொரு தகவல்
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினால் பொலிஸ் மா அதிபருக்கு மட்டும் தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ள நிலையில், பொலிஸ் மா அதிபா் பதவி வெற்றிடமாகவில்லை என ஜனாதிபதிக்கு சட்ட ஆலோசனை கிடைத்துள்ளதாகத் தொிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 21 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின்படி, பொலிஸ் மா அதிபா் பதவி வெற்றிடமாக இல்லாத நிலையில், ஜனாதிபதியால் பதில் பொலிஸ் மா அதிபரை நியமிக்க முடியாது என அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சட்டப் பிரச்சினை
இதன்காரணமாக, சம்பந்தப்பட்ட சட்டப் பிரச்சினை தீர்க்கப்படும் வரை, பொலிஸ் மா அதிபர் பதவி வெற்றிடமாகவே இருக்கும் என, அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, பொலிஸ் மா அதிபர் தனது கடமைகளை மேற்கொள்வதில் மாத்திரமே தடையாக உள்ளதாக கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





விஜய்யின் மறைந்த தங்கை வித்யா, இப்போது உயிருடன் இருந்தால் இப்படி தான் இருப்பாரா? வீடியோ இதோ Cineulagam

இந்த 3 சூழ்நிலைகள்... இந்தியாவிற்கு எதிராக மீண்டும் அணு ஆயுத மிரட்டல் விடுத்த பாகிஸ்தான் News Lankasri
