தம்பாப்பிள்ளை மகேஸ்வரனுக்கு டக்ளஸ் இரங்கல்
வாலிப வயதின் வசீகரக் கனவுகளை வெறுத்து உரிமையுடன் வாழத்துடிக்கும் தமிழ் தேசிய இனத்தின் விடியலுக்காக தன்னையே தந்தவர் தமிழீழ இராணுவம் (TEA) இயக்கத்தின் தலைவர் தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
தம்பாப்பிள்ளை மகேஸ்வரனின் மரணம் தொடர்பில் அவர் தனது முகநூலில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
குறித்த இரங்கல் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
பனாகொடை படைமுகாம்
“பனாகொடை படைமுகாமில் கைதாகி அவரும் நானும் இருந்த வேளை எனக்கு நடந்தது போலவே அவருக்கும் வதைகள் நடந்தன.
நேசித்த மக்களுக்காக நாமிருவரும் வலிகளை சுமந்த வேளை நெஞ்சுரம் அவரிடம் கண்டேன்.
இது படை முகாம். எம்மை சிறைசாலைக்கு மாற்றுங்கள் என்ற கோரிக்கையை முன் வைத்து நாமிருவரும் ஈழப்போராட்ட வரலாற்றில் முதன் முதலில் வதை முகாமிற்குள் இருந்தே போராட்டம் நடத்தும் புதிய அத்தியாயத்தை தொடக்கி வைத்தவர்கள்.
இரத்த வேள்வி
அதன் போது என்னுடன் சேர்ந்து அவர் எதிர் கொண்ட சவால்களை எண்ணிப்பார்க்கிறேன்.
பின்னர் வெலிக்கடை சிறைக்கு மாற்றப்பட்டோம். 83 இல் அங்கொரு இரத்த வேள்வி நடந்தது.” என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |



