மூன்றாவது தடவையாக வழங்கப்படும் பைசர் தடுப்பூசி தொடர்பில் வெளியான தகவல்

Srilanka Covid Jaffna
By Independent Writer Dec 03, 2021 08:39 PM GMT
Report

 கோவிட் 19 தடுப்பூசி வழங்கல் திட்டத்தின் கீழ் நோயெதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கும் அதிக ஆபத்துள்ள நோய் நிலைமையுடைய 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் மேலதிகமாக மூன்றாவது தடவையாக (Pfizer) தடுப்பூசி வழங்குவது தொடர்பில் வடமாகாண மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் முக்கிய அறிவிப்பொன்றினை வெளியிட்டுள்ளார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

கோவிட் 19 தடுப்பூசி வழங்கல் திட்டத்தின் கீழ் நோயெதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கும் அதிக ஆபத்துள்ள நோய் நிலைமையுடைய 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் மேலதிகமாக மூன்றாவது தடவையாக (Pfizer) கோவிட்-19 தடுப்பூசியானது 22.11.2021 ஆம் திகதி முதலும் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 29.11.2021 ஆம் திகதி முதலும் வழங்கப்பட்டு வருகின்றன.

எனினும் வருந்தத்தக்க வகையில் இந்த மேலதிக தடுப்பூசியினை பெற்றுக்கொள்வதில் மக்களிடையே ஆர்வம் குறைவாகவே காணப்படுகின்றமையினை அவதானிக்க முடிகின்றது. வடமாகாணத்தில் ஏற்பட்டுள்ள இறப்புக்களை ஆராயும் போது வயது முதிர்ந்தவர்கள் மற்றும் நோயெதிர்ப்பு சக்தி குறைந்தவர்களின் எண்ணிக்கையே அதிகமாக காணப்படுகின்றது.

தடுப்பூசி ஏற்றிக்கொள்வதன் மூலம் மட்டுமே கோவிட் தொற்று ஏற்பட்டாலும் அதன் தாக்கத்தையும் அதன் மூலம் ஏற்படும் இறப்புக்களையும் குறைக்கக்கூடியதாக இருக்கும்.

நோயெதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் மற்றும் அதிக ஆபத்துள்ள நோய் நிலைமையுடைய 20 வயதிற்கு மேற்பட்டவர்கள் இரண்டாவது தடுப்பூசியைப் பெற்று ஆகக்குறைந்தது ஒரு மாத இடைவெளியின் பின்னரும் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் மூன்று மாத இடைவெளியின் பின்னரும் இத் தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளலாம்.

எனவே மேற்குறிப்பிட்டவர்களில் சினோபாம் கோவிட்-19 தடுப்பூசியை இரண்டு தடவைகள் பெற்றுக்கொண்டவர்கள் மட்டுமே தமது தடுப்பூசி அட்டையினை சமர்ப்பித்து தமக்குரிய மூன்றாவது தடுப்பூசியினை (Pfizer) பெற்றுக்கொள்ள முடியும்.

அந்த வகையில் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் அந்தந்த பிரதேசங்களிற்குரிய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளிலும், நோயெதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கும் அதிக ஆபத்துள்ள நோய் நிலைமையுடைய 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் மற்றும் தடுப்பூசி அல்லது வேறு மருந்துகளிற்கு ஒவ்வாமை உடையவர்களுக்கும் எதிர்வரும் மார்கழி மாதம் 04, 11 ஆம் திகதி சனிக்கிழமைகளில் தடுப்பூசி வழங்குவதற்கு யாழ்.மாவட்டத்தில் யாழ். போதனா வைத்தியசாலை மற்றும் பருத்தித்துறை, ஊர்காவற்துறை, தெல்லிப்பழை, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைகளிலும், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களில் உள்ள மாவட்ட பொது வைத்தியசாலைகளிலும் இத்தடுப்பூசிகள்,வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

60 வயதிற்கு மேற்பட்டவர்களில் அவ்வாறான நிலைமைகள் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டு தடுப்பூசி வழங்கப்படாது திருப்பி அனுப்பப்பட்டவர்கள் தடுப்பூசி வழங்கும் நிலையத்தில் உள்ள வைத்திய அதிகாரியின் பரிந்துரைக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டு மேற்குறிப்பிட்ட வைத்தியசாலைகள் ஏதாவது ஒன்றில் தமக்குரிய மூன்றாவது தடுப்பூசியினை (Pfizer)பாதுகாப்பாக பெற்றுக்கொள்ள முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.      

3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
மரண அறிவித்தல்

தென்காசி, India, சென்னை, India

28 Apr, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US