கொழும்பில் தமிழர் ஒருவரை அச்சுறுத்திய மர்மநபர் யார்? பொலிஸார் தகவல்
கொழும்பில் தமிழர் ஒருவரை சினிமா பாணியில் கடத்திச் சென்று கொள்ளையிட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சில தினங்களுக்கு முன்னர் பம்பலபிட்டியில் வைத்து தமிழர் ஒருவரை அச்சுறுத்தி பணம், நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.
கொள்ளையில் ஈடுபட்ட நபர் ஏற்கனவே விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருவர் என தெரியவந்துள்ளது. விடுதலையாகுவதற்கு முன்னர் குறித்த நபர் சிறைச்சாலையில் இருந்த கைவிலங்குகளை திருடியுள்ளார். அதனை பயன்படுத்தியே தமிழர் ஒருவரை அச்சுறுத்தி கொள்ளையடித்துள்ளார்.
இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர் இதற்கு முன்னர் கிருலப்பனை பிரதேசத்தில் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார். ஹெரோயின் தொடர்பில் கைது செய்யப்பட்ட போது கைவிலங்குகளை திருடியுள்ளமை தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் தொடர்பில் பம்பலப்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டிற்கமைய சீசீடீவி காணொளி உதவியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் 3 பவுண் நிறையிலான நகைகள் மற்றும் ஒன்றரை லட்சம் ரூபாய்க்கும் அதிக பணமும் மீட்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் கிருலப்பனை பிரதேசத்தை சேர்ந்த 34 வயதான முச்சக்கர வண்டி சாரதி என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





இந்தியாவின் சிறந்த டாப் 5 மின்சார ஸ்கூட்டர்கள்: உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்கூட்டரை தேர்ந்தெடுப்பது எப்படி? News Lankasri

பார்க்கிங் படத்திற்கு 3 தேசிய விருதுகள், ஜீ.வி.பிரகாஷ் சிறந்த இசையமைப்பாளர்.. விருது வென்றவர்கள் லிஸ்ட் Cineulagam
