சிறைச்சாலைகள் சம்பந்தமாக விசாரணை நடத்துவது எனது பொறுப்பு!துஷார உபுல்தெனிய
அனுராதபுரம் மற்றும் வெலிகடை சிறைச்சாலைகளில் அண்மையில் நடந்த சம்பவங்கள் குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதாக தான் ஊடகங்களிடம் கூறியதாகவும், எனினும் அவை வெளியிடப்படவில்லை எனவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உபுல்தெனிய (Tushara Upuldeniya ) தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலைகளில் எந்த சம்பவங்களும் நடக்கவில்லை என தான் ஊடகங்களுக்கு கூறியதாக சமூக வலைத்தளங்களில் மேற்கொள்ளப்படும் பிரசாரம் முற்றிலும் உண்மைக்கு புறப்பானது.
அண்மையில் இலத்திரனியல் ஊடகம் ஒன்றிடம் கூறிய ஒரு பகுதியை மாத்திரம் மேற்கோள்காட்டி சமூக ஊடகங்களில் இப்படியான பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
சிறைச்சாலைகளில் நடந்த சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு தெரியப்படுத்தி இருந்தேன். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்த சிறைச்சாலை ஆணையாளர் ஒருவரை நியமித்துள்ளேன்.
இது சம்பந்தமாக விசாரணை நடத்துவது தனது பொறுப்பு எனவும் உபுல்தெனிய குறிப்பிட்டுள்ளார்.
சிறைச்சாலைகளில் நடந்த சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு தெரியப்படுத்தி இருந்தேன். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்த சிறைச்சாலை ஆணையாளர் ஒருவரை நியமித்துள்ளேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சந்தோஷ செய்தியை வெளியிட்டுளள சிறகடிக்க ஆசை வெற்றி மற்றும் அவரது மனைவி... ஆனா இது வேற நியூஸ் Cineulagam
தங்கம் முதல் வெள்ளி நாணயம் வரை…ஜேர்மனியில் 2000 ஆண்டுகள் பழமையான புதையல் கண்டுபிடிப்பு News Lankasri