பாடசாலைகள் தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்ட தகவல்
நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளும் இதுவரையில் செயற்பட்ட முறையில் சுகாதார வழிக்காட்டலின் கீழ் நடத்தி செல்லவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
பாடசாலைகளில் அதிபர்களின் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள குழுவினால், பாடசாலைகளை நடத்தி செல்லும் முறை திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
மூன்றாவது கோவிட் பரவல் நிலைமைக்கு மத்தியில் எதிர்வரும் 30ஆம் திகதி வரை செல்லுப்படியாகும் வகையில் சுகாதார வழிக்காட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
அதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவலுக்கமைய, பாடசாலைகள், பாலர் பாடசாலைகள் போன்றவற்றை 50 வீத மட்டத்தில் நடத்தி செல்ல வேண்டும். அனைத்து மேலதிக வகுப்புகள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களை நடத்தி செல்வதற்கு அனுமதி இல்லை. அத்துடன் அனைத்து பல்கலைக்கழகங்களும் மூடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, உயர்தர பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 30ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடவுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
தற்போது வரையில் அந்த நடவடிக்கைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக பரீட்சை திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
மேலும் எதிர்வரும் பரீட்சை நடவடிக்கைகளை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்ட திகதியில் மாற்றங்கள் மேற்கொள்வதற்கு தீர்மானங்கள் இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.