நான் சொன்னதை கேட்டிருந்தால் இவ்வாறு நடந்திருக்காது! முன்னாள் ஜனாதிபதி தகவல்
பசளை பிரச்சினை தொடர்பில் நான் சொன்னதைக் கேட்டிருந்தால் இவ்வாறு நடந்திருக்காது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) தெரிவித்துள்ளார்.
திருகோணமலை மாவட்டத்தில் மஹதிவுல்வெவ-திவுறும்கல விகாரையில் இன்று (23) தியான மண்டபத்தை திறந்து வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கேள்வி - நாட்டில் தற்போது உரம் ,பசளை பிரச்சினை காணப்படுகின்றது. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அரசாங்கத்தின் பிரதான கட்சியாக இருக்கின்றது. அதனடிப்படையில் நீங்கள் பசளை பிரச்சினை தொடர்பில் எடுத்த நடவடிக்கைகள் என்ன?
கடந்த போகத்தின் போது முதல் வாரத்தில் பசளையை தடை செய்யப்போவதாக ஊடகங்களில் வெளியானதையடுத்து நான் தனிப்பட்ட முறையிலும், நாடாளுமன்ற குழுவின் ஊடாகவும், சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு தெரியப்படுத்தினேன். ஆனாலும் நான் சொன்னதை அவர்கள் கேட்கவில்லை. அதனாலேயே இவ்வாறான சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அமைச்சராக, ஜனாதிபதியாக இருந்த நேரத்தில் சேதனப் பசளை ஊக்குவிக்கும் நோக்கில் பல திட்டங்களை மேற்கொண்டு வந்தேன். இருந்தும் உடனடியாக சேதனப்பசளையை மாத்திரம் பயன்படுத்தி விவசாய நடவடிக்கைகளை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
5 அல்லது 10 வருடங்கள் காலம் தாமதிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 14 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

ஜாய் கிரிசில்டா பேச்சால் பல கோடி நஷ்டம்.. நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த மாதம்பட்டி ரங்கராஜ் Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
