உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மைத்திரியின் மகன் வெளியிட்ட தகவல்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நாளில் தான் இலங்கையிலேயே இருந்ததாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹாம் சிறிசேன தெரிவித்துள்ளார்.
அன்றைய தினம் தான் இலங்கையிலேயே இருந்ததாகவும் குடும்பத்தில் அனைவரும் வெளிநாட்டில் இருந்ததாக சமூக வலைத்தளங்களில் போலி தகவல் வெளியாகியுள்ளது.
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெறுவதற்கு முதல் நாள் தான் வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வருகைத்தந்ததாக அவர் கூறியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெறும் சந்தர்ப்பத்தில் தான் கொழும்பை விட்டு வெளியேற தயாராக இருந்ததாகவும், தனது தந்தையின் பதவி காலத்தில் இடம்பெற்ற மிகவும் கவலைக்குரிய சம்பவம் உயிர்த்த ஞாயிறு தாக்குதலாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.