தீவிபத்திற்குள்ளான MSC மெசினா கப்பல் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!
இலங்கை கடற்பரப்பில் வைத்து தீவிபத்திற்கு உள்ளான MV MSC மெசினா என்ற கப்பல் இன்று சிங்கப்பூர் நோக்கி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை கடற்படை இதனை தெரிவித்துள்ளது.
மஹரவான வெளிச்சவீட்டுக்கு கிழக்கே 480 கடல்மைல் தூரத்தில் வைத்து MV MSC மெசினா என்ற கப்பலின் இயந்திர அறையில் தீப்பரவல் ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று தீ முற்றிலுமாக அனைந்துவிட்டதாகவும், மீண்டும் கப்பல் சிங்கப்பூர் நோக்கி பயணத்தை ஆரம்பித்துள்ளதாகவும்” எங்களுக்குத் தகவல் கிடைத்தது என்று இலங்கை கடற்படை செய்தித் தொடர்பாளர் இந்திக டி சில்வா தெரிவித்தார்.
தீ விபத்துக்குப் பின்னர் 28 பணியாளர்களில் ஒருவரைக் காணவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
லைபீரியாவில் பதிவுசெய்யப்பட்ட MV MSC மெசினா புதன்கிழமை கொழும்பு துறைமுகத்தை விட்டு வெளியேறி சிங்கப்பூர் செல்லும் வழியில் தீவித்திற்குள்ளானமை குறிப்பிடத்தக்கது.