சட்டவிரோதமான முறையில் இறக்குமதியான வாகனங்கள் குறித்து வெளியான தகவல்
சுங்க வரி செலுத்தாமல் சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்டு, மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் (Department of Motor Traffic) போலியாக பதிவு செய்யப்பட்ட சுமார் 6,000 கார்கள் நாடு முழுவதும் உள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு கண்டுபிடித்துள்ளது.
அதற்கமைய, விசாரணையின்படி, இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை பொறுப்பேற்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், சுங்க வரி மற்றும் இதர கட்டணங்களை வசூலிப்பதற்காக குறித்த கார்கள் சுங்க திணைக்களத்தின் பொறுப்பில் வைக்கப்படும் எனவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
வாகனங்களின் சட்டப்பூர்வ தன்மை
இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களின் சட்டப்பூர்வ தன்மையை சரிபார்க்க சுங்கத் திணைக்களம் சமீபத்தில் ஒரு ஒன்லைன் வழிமுறையை அறிமுகப்படுத்தியது.
இதன் மூலம் ஒரு காரை வாங்குவதற்கு முன் இறக்குமதி வரிகள் மற்றும் பிற கட்டணங்கள் சரியாக செலுத்தப்பட்டதா என்பதை சரிபார்க்க முடியும் என்று இலஞ்ச ஒழிப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தயவுசெய்து இந்த சீரியலை முடித்துவிடுங்கள், கதறும் சன் டிவி சீரியல் ரசிகர்கள்... அப்படி என்ன தொடர் Cineulagam

10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri

கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை ஒப்புக்கொண்ட ஆனந்தி, அருவாளை எடுத்த அவரது அப்பா.. சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam
