சீன கரிம உரம் தொடர்பில் பேராசிரியர் வெளியிட்ட தகவல் - செய்திகளின் தொகுப்பு
இலங்கைக்குக் கொண்டு வரப்பட்ட சீன கரிம உரம் பரிசோதனையில் இரண்டுமுறை நிராகரிக்கப்பட்ட நிலையில் மீண்டுமொரு பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டிய அவசியமில்லை என பேரதனை பல்கலைக்கழகத்தின் பயிர்ச்செய்கை விஞ்ஞான பீடத்தின் பேராசிரியர் புத்தி மாரம்பே(Professor Buddhi Marambe) தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்று (26) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு இரண்டுமுறை பரிசோதிக்கப்பட்டு அந்த உரம் தகுதியற்றது எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில் மூன்றாவது முறையாகவும் பரிசோதனைக்கு உட்படுத்துவது பொருத்தமான நடவடிக்கை இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு,