இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள முக்கிய அறிக்கை
இலங்கையில் பதினான்கு மடங்கு தொலைபேசிகள் பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியினால் (Central Bank of Sri Lanka) வெளியிடப்பட்ட 2023 ஆம் ஆண்டுக்கான பொருளாதார வர்ணனை அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின்படி, நிலையான தொலைபேசிகளின் பயன்பாடு 100 பேருக்கு 10.5 ஆகவும், கையடக்க தொலைபேசிகளின் எண்ணிக்கை 100 பேருக்கு 142 ஆகவும் உள்ளது.
இணைய இணைப்புகளின் அடர்த்தி
இதன்படி, 2023 ஆம் ஆண்டு சராசரி மக்கள் தொகையின் அடிப்படையில் நாட்டில் பயன்படுத்தப்படும் தொலைபேசிகளின் எண்ணிக்கை கையடக்க தொலைபேசிகளின் எண்ணிக்கை விட குறைவு என்றும் கூறப்படுகின்றது.
மேலும், நாட்டில் இணைய இணைப்புகளின் அடர்த்தி 100 பேருக்கு 103 என்ற அடிப்படையில் செயற்படுவதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |