மட்டக்களப்பு மாவட்ட 'ரணவிரு சேவா' நலன்புரி சேவைகள் குறித்து வெளியான தகவல் (Photos)
மட்டக்களப்பு மாவட்ட 'ரணவிரு சேவா' குடும்பங்களிடமிருந்து நலன்புரி சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கான வேண்டுகோள்கள் வருவது மிகக் குறைவாக உள்ளது. அவ்வாறு வேண்டுகோள்கள் வரும்பட்சத்தில் நாட்டின் வேறு பகுதிகளிலுள்ள ரணவிரு சேவா குடும்பங்களுக்கு வழங்குவதுபோன்று இங்கும் நனல்புரி சேவைகளை வழங்க முடியும் என ரணவிரு சேவா கிழக்கு மாகாண பணிப்பாளர் டபிள்யூ.டி. ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
போரினால் பாதிக்கப்பட்ட பாதுகாப்புத் தரப்பு குடும்பங்களின் நலன் பேணும் அமைப்பான 'ரணவிரு சேவா' சங்கத்தின் ஒன்று கூடல் நிகழ்வு அதன் மாவட்டத் தலைவர் முன்னாள் பொலிஸ் உத்தியோகஸ்தர் எஸ்.ஏ.சி. அப்துல் வஹாப் தலைமையில் மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலக மண்டபத்தில் நேற்றைய தினம் (15.02.2023) நடைபெற்றுள்ளது.
நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய ரணவிரு சேவா கிழக்கு மாகாண பணிப்பாளர் டபிள்யூ. டி. ஹேமச்சந்திர, “மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த யுத்தத்தின்போது பாதிக்கப்பட்ட சுமார் 144 இற்கு மேற்பட்ட பாதுகாப்புத் தரப்பைச் சேர்ந்த குடும்பங்கள் உள்ளார்கள். இவர்களில் தெரிவு செய்யப்பட்ட சிலருக்கு ஏற்கெனவே சிறந்த வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.
நலன்புரி சேவைகள்
அதேநேரம் ரணவிரு சேவா அமைப்பினூடாக பாடசாலை தொடக்கம் பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் ரணவிரு சேவா குடும்பங்களிலுள்ள மாணவர்களுக்குக் கல்விக்கான உதவிகள், அங்கவீனர்களுக்கான உதவிகள், இலவச மருத்துவ வசதிகள் குறைந்த வட்டியிலான வீட்டுக் கடன்கள், சுயதொழிலுக்கான கடன் வசதிகள் உட்பட இன்னும் பல்வேறான நலன்புரி சேவைகள் உள்ளன. ஆயினும் இந்த உதவிகளைக் கோரி மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து வேண்டுகோள்கள் வருவது குறைவாகவே உள்ளது.
2023ஆம் ஆண்டில் நீங்கள் பல்வேறு நலன்புரி சேவைகளைப் பெற்றுக் கொள்ள முடியும். மார்ச் மாதம் 15ஆம் திகதியளவில் நாம் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ரணவிருசேவா குடும்பங்களின் நன்மை கருதி இடம்பெயர் சேவையொன்றினை வழங்கவுள்ளோம். அத்தருணத்தில் ரணைவிரு சேவா தலைவரும் இங்கு சமூகமளித்திருப்பார்.
அதன்போது ரணவிரு சேவா குடும்ஙகள் தமது பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதோடு சேவைகளையும் பெற்றுக் கொள்ள முடியும். இடம்பெயர் மருத்துவ முகாமிலும் சேவைகள் வழங்கப்படவுள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.
ரணவிரு சேவா குடும்பங்கள்
இந்நிகழ்வில் ரணவிரு சேவா குடும்பங்கள் தங்களது உறவுகளான பாதுகாப்புத் தரப்பினர் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் அவர்களது சம்பளம் ஓய்வூதியம் ஆகியவற்றைப் பெறுவதிலுள்ள நிருவாக ரீதியாக உள்ள பிரச்சினைகளை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியடச்கரிடமும் அதிகாரிகளிடமும் முன் வைத்துள்ளனர்.
இந்நிகழ்வில் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எல்.ஆர். குமாரசிறி ரணவிரு
சேவா மாவட்ட இணைப்பு உத்தியோகஸ்தர் சமத் லியனகே உட்பட மட்டக்களப்பு
மாவட்டத்தைச் சேர்ந்த ரணவிரு சேவா குடும்பங்களின் உறுப்பினர்கள் சுமார் 60
இற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.














அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam

பாரதி கண்ணம்மா, கல்யாணம் முதல் காதல் வரை குழந்தை நட்சத்திரங்களை நியாபகம் இருக்கா?... எப்படி உள்ளார்கள் பாருங்க, வீடியோ Cineulagam

6 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
