பணவீக்கம் தொடர்பில் வெளியான தகவல்
இலங்கையின் பணவீக்கம் தொடர்பில் மத்திய வங்கியின் பொருளாதார பகுப்பாய்வு பிரிவின் பிரதி பணிப்பாளர் கலாநிதி எல்.ஆர்.சி. பத்பேரிய தெரிவித்துள்ளார்.
இதற்கமைய,பணவீக்கம் வீழ்ச்சி அடைவதற்கு 3 விடயங்கள் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் தகவல் வெளியிட்டுள்ளார். இந்த வருடத்தில் பணவீக்கம் பெருமளவில் குறைய கூடியதாக சாத்தியம் இருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய, கடனுக்கான வட்டி வீதங்களும் குறைவடைய கூடியதற்கான சாத்திய கூறுகள் இருப்பதாகவும்,வட்டி வீதம் அதிகரிப்பின் காரணமாக வர்த்தக நடவடிக்கைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
கொள்கை ரீதியிலான வட்டி
வட்டி வீதங்களை குறைக்க வேண்டுமாயின் பண வீக்கத்தை குறைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். கொள்கை ரீதியிலான வட்டி வீதத்தில் எந்த வித மாற்றமும் இன்றி முன்னெடுப்பதற்கு மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.
இதற்கமைவாக நிலையான வைப்பீட்டுக்கு 14.5 வீதமும், நிலையான கடன் வசதிக்கு 15.5 வீத வட்டி முன்னெடுக்கப்படக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.
தேசிய நுகர்வோர் விலை சுட்டெண்ணின் படி, இலங்கையின் பணவீக்கம் 2022 ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து 65 சதவீதத்திலிருந்து 2022 டிசம்பரில் 59.2 சதவீதமாக மேலும் குறைந்தமை குறிப்பிடத்தக்கது.