பயண தடை நீக்குவது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் வெளியிட்ட தகவல்
எதிர்வரும் 14ஆம் திகதி வரை பதிவாகும் கொவிட் தரவுகளுக்கமைய பயணத்தடையை தொடர்ந்தும் நீடிப்பது தொடர்பில் அரசாங்கத்தினால் தீர்மானிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
கம்பஹா மாட்ட வைத்தியசாலைக்கு நேற்று சென்றிருந்த போது ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளியிட்டார்.
கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது தற்போது கொவிட் தொற்றாளர்களில் சிறிய அதிகரிப்பும் கொவிட் மரணங்களின் எண்ணிக்கையில் 28 வீத அதிகரிப்பும் காணப்படுகின்றது.
நாட்டை முடக்கினாலும் அதற்கு முன்னர் வைரஸ் நுழைந்திருந்தால் 14 நாட்கள் முழுவதும் அது பரவ கூடும். அவ்வாறான நோயாளர்கள் தான் தற்போது அடையாளம் காணப்படுகின்றனர்.
நாட்டை மூடி இன்னமும் இரண்டு வாரங்கள் தான். இன்னும் ஒரு வாரம் பார்ப்போம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
டெல்லி குண்டுவெடிப்பு ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடியா? 2 வாரம் முன்பே எச்சரித்த LeT தளபதி News Lankasri
யார் இந்த கிரிஜா? பிரபல நடிகருடன் நெருக்கமான காட்சிகள், திடீர் ட்ரெண்டிங், முழு விவரம்... Cineulagam
Numerology: இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்ப துன்பங்களை மறந்து வாழ்வார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan