கனேடிய குடியுரிமைக்கு விண்ணப்பிப்பது தொடர்பாக புலம்பெயர்தல் அமைப்பு வெளியிட்டுள்ள தகவல்
கனேடிய குடியுரிமை பிரதிநிதிகளைக் கொண்டவர்கள் இனி ஒன்லைனில் குடியுரிமை கோரி விண்ணப்பிக்கலாம் எனக் கனடா அறிவித்துள்ளது.
ஆனால், குடியுரிமை பிரதிநிதிகள், குடியுரிமைக்கு விண்ணப்பிப்பவர்கள் சார்பில் தாங்களே விண்ணப்பிக்க முடியாது.
குடியுரிமை பிரதிநிதிகளைக் கொண்டவர்களுக்காக ஒன்லைன் போர்ட்டல் திறந்துள்ளது. ஆனால், குடியுரிமை பிரதிநிதிகள், அடுத்த ஆண்டு சிறிது காலம் வரை, குடியுரிமைக்கு விண்ணப்பிப்பவர்கள் சார்பில் தாங்களே விண்ணப்பிக்க முடியாது.
நவம்பர் 30 முதல், கனேடிய புலம்பெயர்தல் அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு, தன் ஒன்லைன் போர்ட்டலை திறந்து வைப்பதை, குடியுரிமை பிரதிநிதிகள் கொண்டோர் குடியுரிமை கோரி விண்ணப்பிப்பதற்கு வசதியாக நீட்டித்துள்ளது.
அப்படி ஒன்லைன் மூலம் குடியுரிமை கோரி விண்ணப்பிப்பவர்கள், அவர்களே தங்கள் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, கையொப்பமிட்டு, தாங்களேதான் தங்கள் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கவேண்டும்.
அத்துடன், தங்கள் கணக்கு தொடர்பான பாஸ்வேர்டு முதலான எந்த விடயங்களையும் தங்கள் குடியுரிமை பிரதிநிதி உட்பட யாரிடமும் வெளியிடக்கூடாது.
இது குறித்து மின்னஞ்சல் வாயிலாக, கனேடிய புலம்பெயர்தல் அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு தெரிவித்த ஒரு செய்தியில், குடியுரிமை பிரதிநிதிகள், விண்ணப்பிப்பவர் சார்பில் தாங்களே ஒன்லைனில் விண்ணப்பிக்கக்கூடாது என்றும், ஆனால், அவர்கள் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்வது எப்படி என்பது குறித்து ஆலோசனை வழங்கலாம் என்றும், விண்ணப்பதாரர் விண்ணப்பத்தை ஒன்லைன் வாயிலாகச் சமர்ப்பித்த பின், அவர் சார்பில் புலம்பெயர்தல் அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்புடன் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது, குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் நடைமுறையை நவீனமாக்கும் வகையில், சமீபத்தில் எடுக்கப்பட்டுள்ள முயற்சியாகும்.
தனி நபர் விண்ணப்பதாரர்கள் குடியுரிமைக்கு ஒன்லைனில் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ள நிலையில், சமீபத்தில் குடியுரிமை கோரி விண்ணப்பிப்பவர்களின் விண்ணப்பத்திற்கான ஆதாரத்தையும் ஒன்லைன் வாயிலாக கனடா பெறத் தொடங்கியுள்ளது.
இந்த ஆவணங்கள், குடியர்களுக்கு வெளிநாட்டில் பிறந்த குழந்தைகள், தங்கள் குடியுரிமைக்கான உரிமையை நிரூபிப்பதற்கு உதவுகின்றன.
2022ஆம் ஆண்டில், குடும்பங்கள், வயது வராதவர்கள் ஆகியோருக்கும் ஒன்லைன்
வாயிலாக விண்ணப்பிப்பதற்கு அனுமதியளிக்கப்படுவதுடன், குடியுரிமை
பிரதிநிதிகளும் விண்ணப்பதாரர் சார்பில் ஒன்லைனில் விண்ணப்பிக்க
அனுமதியளிக்கப்படும் என கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை
அமைப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.