பல்கலைக்கழக வெற்றிடங்கள் குறித்து வெளியான தகவல்
இந்த ஆண்டுக்கான பல்கலைக்கழக வெற்றிடங்கள் எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் பூர்த்தி செய்யப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
க. பொ. த உயர்தர பரீட்சை மீள் மதிப்பீட்டு முடிவுகளின் பின்னர், பல்கலைக்கழகங்களுக்கான விண்ணப்பங்களும் அங்கு பரிசீலிக்கப்படும் என அதன் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
புதிய கல்வியாண்டுக்கான மருத்துவ பீடங்கள், கலை பீடங்கள் உட்பட பல பீடங்களின் கல்வி நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக வெற்றிடங்கள்
இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான பல்கலைக்கழக வெற்றிடங்கள் எத்ர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் பூர்த்தி செய்யப்படும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க குறிப்பிட்டுள்ளார்.
தற்போது 2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர தர பரீட்சை நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா ராணுவத்தில் களமிறங்கிய மாயாவி..! பென்டகன் கையிலெடுத்த Project Maven AI திட்டம் News Lankasri
புதன் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan