ஜெர்மனி வாழ் இலங்கையர்கள் விடுத்துள்ள கோரிக்கை - பலருக்கு கிடைத்த நன்மை
ஜெர்மனியின் பல நகரங்களில் தூதரக நடமாடும் சேவைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என இலங்கை மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அண்மையில் ஜெர்மனியிலுள்ள இலங்கை தூதரகம் நடமாடும் தூதரக சேவை வெற்றிகரமாக முன்னெடுத்திருந்தது.
இதன்மூலம் பல்வேறு சேவைகளை ஜெர்மனி வாழ் இலங்கையர்கள் பெற்றுக்கொண்டனர்.
நடமாடும் தூதரக சேவை
இதன்போது இந்த சேவையை நாடு முழுவதும் விரிவுபடுத்துமாறு கோரிக்கை விடுத்தனர்.

ஜெர்மனியில் இலங்கையர்கள் அதிகம் வாழும் ஹெசன் மாகாணத்தின் தலைநகரான பிராங்பேர்ட்டில் நடமாடும் தூதரக சேவை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது நூற்றுக்கும் மேற்பட்ட இலங்கையர்கள் பங்கேற்று தமக்கு தேவையான சேவைகளை பெற்றுக்கொண்டனர்.
பயன்பெற்ற இலங்கையர்கள்
கடவுச்சீட்டு தொடர்பான சேவைகள், பிறப்புப் பதிவு, ஆவணங்களைச் சான்றுப்படுத்தல்> ஓய்வூதியம் பெறுவோரின் உறுதிப்படுத்தல் சான்றுதழ் உள்ளிட்ட பல்வேறு வகையான தூதரக சேவைகளும் இந்த நிகழ்வில் வழங்கப்பட்டன.

இந்த நடமாடும் சேவை, தொலைவில் வசிக்கும் சமூகத்தினருக்கு அத்தியாவசியமான தூதரகச் சேவைகளை அவர்களின் இருப்பிடத்திற்கே கொண்டு சென்று வழங்கும் தூதரகத்தின் அர்ப்பணிப்பைக் காட்டுவதாக, பயன்பெற்ற இலங்கையர்கள் தெரிவித்துள்ளனர்.