பொருளாதார மற்றும் உணவு நெருக்கடியிலிருந்து இலங்கையின் மீட்சி குறித்து வெளியான தகவல்
உலக உணவு தினத்தின் தொனிப்பொருள்
கடந்த தசாப்தங்களாக இலங்கையின் உள்நாட்டு போர், 2004ஆம் ஆண்டு சுனாமி, கோவிட் - 19 தொற்றுநோய் மற்றும் இப்போது பொருளாதார மற்றும் உணவு நெருக்கடி ஆகியவற்றிலிருந்து மீட்சி பெற ஐரோப்பிய ஒன்றியம், இலங்கையர்களுடன் தோளோடு தோள் நின்று உதவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“எவரையும் தவிர்க்காதீர்கள்” என்பதே இவ்வருட உலக உணவு தினத்தின் தொனிப்பொருளாகும்.
அந்த வகையில் இலங்கையுடனான நமது ஒத்துழைப்புக்கு இதுவும் முக்கிய காரணமாகும் என்று இலங்கை மற்றும் மாலைதீவிற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழுவின் பிரதித் தலைவர் லார்ஸ் பெடல் தெரிவித்துள்ளார்.

கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்ட விடயம்
“ஒருவருக்கு பாதுகாப்பான உணவு” என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடலின் போது அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், ஐரோப்பிய ஒன்றியம் நீண்டகால மனிதாபிமான மற்றும் வளர்ச்சி பங்காளியாகும்.

இந்த நிலையில் சேதன விவசாயத் துறையில் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ஆதரவு போன்ற முன்முயற்சிகள் மூலம் சிறந்த உணவு உற்பத்தி, சிறந்த ஊட்டச்சத்து, சிறந்த சூழல் மற்றும் சிறந்த வாழ்க்கை ஆகியவற்றை ஊக்குவிக்க விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.