கொழும்பில் பாடசாலை மாணவர்கள் தொடர்பில் கல்வி அமைச்சர் தகவல்
நாட்டின் ஏனைய பகுதிகளுடன் ஒப்பிடுகையில் அதிக மக்கள் தொகை கொண்ட கொழும்பில் (Colombo) பாடசாலை செல்லும் சிறுவர்கள் அதிக வீதி விபத்துக்களை எதிர்கொள்கின்றனர் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha) தெரிவித்துள்ளார்.
'பாடசாலை வீதி பாதுகாப்பு கழகம்' (School Road Safety Club) என்ற பெயரில் உத்தியோகபூர்வமாக கல்வி அமைச்சு ஏற்பாடு செய்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
பாடசாலைகளில் ஒழுக்கம்
மேலும் அவர் தெரிவிக்கையில்,
“இதில் பெரும்பாலான வாகன விபத்துக்கள் கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் நிகழ்கின்ற நிலையில் கொழும்பு வலயத்தில் மொத்தம் 144 பாடசாலைகள் உள்ளன.
அவற்றில் 21 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாகவும் 20 பாடசாலைகள் சர்வதேச மற்றும் தனியார் பாடசாலைகளாகவும் மீதமுள்ளவை மேல்மாகாண சபையின் கீழுள்ள பாடசாலைகளாகவும் உள்ளன.
கொழும்பு மாநகரசபைக்குள் தினமும் 196,000 மாணவர்கள் பாடசாலைகளுக்கு
செல்கிறார்கள். அந்த மாணவர்கள் சிசு சீரிய பாடசாலை சேவை, பாடசாலை வான்கள்,
முச்சக்கர வண்டிகள் மற்றும் அவர்களது சொந்த குடும்ப தனியார் போக்குவரத்து
முறைகள் போன்ற பல்வேறு முறைகளைப் பயன்படுத்தி பாடசாலைகளுக்கு செல்கின்றனர்.
மேலும், நம் நாட்டில் எங்கும் ஒழுக்கம் இல்லை. அதைச் சொல்வதற்கு நான் பயப்படவில்லை.
சட்டங்கள் உருவாகும்
இடத்தில் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க முடியாவிட்டால், நாட்டின் குழந்தைகளை நாம் நெறிப்படுத்த முடியாது.
பாடசாலைகளில் முதலில் நாம் ஒழுக்கத்தைப் ஆரம்பிக்க வேண்டும். ஜப்பான் (Japan) போன்ற ஒரு நாட்டில் முன்பள்ளிகளில் ஒழுக்கம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஆனால், எங்கள் முன்பள்ளி அமைப்புகள் முற்றிலும் வேறுபட்டவை.
இணையப் பாதுகாப்பு
இதற்கிடையில், நாட்டில் பதிவாகும் துஷ்பிரயோக வழக்குகளில் பெரும்பாலானவை சிறுவர்களை உள்ளடக்கியதாக உள்ளது. இந்த நிலைமைக்கு முகநுால் (Facebook) முக்கிய காரணியாக உருவெடுத்துள்ளது.
முகநுால் உட்பட சர்ச்சைக்குரிய இணையப் பாதுகாப்பு யோசனையை நாடாளுமன்றம் நிறைவேற்றிய போது பல அமைச்சர்கள் அதற்கு எதிராக பேசினர்.
இந்நிலையில், முகநுால் தொடர்பில் அமெரிக்காவின் நாடாளுமன்றத்தில் கடும் விமர்சனங்கள் எழுப்பப்பட்டுள்ளதோடு மெட்டா தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க் (Mark Zuckerberg) மன்னிப்பும் கோரினார்” என்பதையும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |