சீன நாட்டினால் வழங்கப்பட்ட அரிசி தொடர்பில் வெளியான தகவல்கள் பொய்: சீன பிரதித் தூதுவர் ஹூ வெய்
சீன மக்களினால் இலங்கை மக்களுக்கு நன்கொடையாக உலர் உணவுப் பொதிகள் யாழ். மாவட்டத்தில் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சீன நாட்டினால் வழங்கப்பட்ட அரிசி தொடர்பில் ஒரு சிலரால் வதந்தி மற்றும் பொய்யான தகவல்கள் பரப்பப்படுகின்றன என இலங்கைக்கான சீன பிரதித் தூதுவர் ஹூ வெய் தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எழுப்பப்படும் விமர்சனங்கள் தொடர்பாக இலங்கைக்கான சீன பிரதித் தூதுவரிடம் யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்நிப்பில் வைத்து கேள்வியெழுப்பிய போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
சீன நாட்டினால் வழங்கப்பட்ட அரிசி
மேலும் தெரிவிக்கையில், சீன நாட்டினால் வழங்கப்பட்ட அரிசி தொடர்பில் ஒரு சிலரால் வதந்தி மற்றும் பொய்யான தகவல்கள் பரப்பப்படுகின்றன.
இது தொடர்பில் ஊடகங்கள் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். நான் உட்பட சீன மக்கள் உணவுக்கு பயன்படுத்தும் அரிசியையே இங்கு வழங்கினோம்.
அந்த அரிசியை ஸ்ரிக்கி றைஸ் (sticky rice) என்று சொல்வார்கள். அதனை சமைப்பதற்கான வழி முறை என்பது சற்று வித்தியாசமானது என்றார்.
சீனாவினால் வழங்கிய அரிசியை சமைக்கும் முறையில் தான் பிரச்சினை இருக்கிறது. மிருதுவான வெப்ப நிலையில் சமைக்க வேண்டும்.
சீன, இலங்கை தொடர்பு
இந்நிலையில் சீன நாடும், இலங்கை நாடும் கலாச்சாரம் மதம் தாண்டி நட்பு ரீதியான உதவிகளை எதிர்வரும் காலங்களில் செய்வோம். இலங்கை, சீனா ஆகிய இருநாட்டின் நட்பு என்பது நட்பின் நண்பன் அந்தவகையில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.
பாடசாலை மாணவர்களின் போசாக்கு மட்டத்தினை அதிகரிப்பு செய்வதற்கான உணவுப்பொதிகளும் வழங்கப்பட்டு வருகின்றது.
இது வந்து சீனாத்தூதரகத்தின் நிகழ்ச்சகத்திட்டமாக காணப்பட்டுகின்றன. மேலும் ஒன்பது ஆயிரம் மெற்றிக்தொன் டீசல் எரிபொருள்கள் கிடைக்கபெறவுள்ளது. அவை யாழ்ப்பாண விவசாயிகள், கடற்றொழிலாளர்கள் ஆகியோர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.
மேலும் பத்தாயிரம் மெற்றிக்தொன் அரிசி இலங்கைக்கு சீனா நாடு பெற்றுக்கொடுக்கப்படயிருக்கின்றது. இவ் அரிசிகள் மூலமாக வடமாகாண பாடசாலை மாணவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படயிருக்கின்றது என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் வட பகுதிக்கு வருகை தந்துள்ள சீன பதில் தூதுவர் ஹூ வோய், தலைமையிலான குழுவினர் யா/ சாவகச்சேரி இந்துக் கல்லூரிக்கு நேற்று (29.12.2022) விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது 40 இலட்சம் ரூபா பெறுமதியான மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் மற்றும் சிமாட் வகுப்பறைக்கான உபகரணங்கள் ஆகியவறலறை சீன பதில் தூதுவர் பாடசாலைச் சமுகத்திடம் கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

Super Singer: Grand Finale-ல் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்த போட்டியாளர் யார் தெரியுமா? Manithan

விசா கட்டுப்பாடுகள்: பிரித்தானியாவை விட்டு வெளியேறிய பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டவர்கள் News Lankasri

sambar podi: ஐயங்கார் வீட்டு சாம்பார் பொடி நாவூறும் சுவையில் செய்வது எப்படி? காரசாரமான ரெசிபி Manithan
