சிறைச்சாலைக்கு வருகைதரும் கைதிகள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!
சிறைச்சாலைக்குக் கைதிகளாக வருகை தருவோரில் 75 சதவீதமானோர் கல்வியறிவைப்
பெற்றவர்கள் என்று யாழ்ப்பாணம் சிறைச்சாலை அத்தியட்சகர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
யாழ் . சிறைச்சாலையில் நேற்றைய தினம் (08.04.2023) இடம்பெற்ற நூலக அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது, சிறைக் கைதிகளைக் கைதிகள் என அழைக்கக் கூடாது. மாறாகச் சிறைச்சாலைக்குள் வருபவரை எங்களுள் ஒருவராகப் பார்க்க வேண்டும்.
கல்வியறிவைப் பெற்ற கைதிகள்
சிறைச்சாலைக்கு வருபவரை எங்களுடைய கடமையின் நிமித்தம் நல்ல ஒரு மனிதராக மாற்றி சமூகத்துக்கு விடுவதே எமது நோக்கமாகும். புணர்வாழ்வுக்கு சிறைக்கைதிகளை உட்படுத்துவது 100 வீதம் வெற்றியளிக்கின்றதா என்பது சந்தேகத்துக்குரிய ஒன்றாகக் காணப்படுகின்றது.
ஏனெனில் சிறைச்சாலையில் புணர்வாழ்வு பெற்றுச் சென்றவர்களில் பலர் மீண்டும் சிறைக்கு வருகின்றனர். அத்துடன் கல்வியறிவைப் பெற்ற 75 சதவீதமானவர்களே கைதிகளாக வருகின்றனர்.
கைதிகள்
எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் கைதிகளாக வருவது குறைவே. அவர்களுக்கு நாம் வெவ்வேறு விதமான புணர்வாழ்வை வழங்க வேண்டும். பாதுகாப்புக் காரணங்களுக்காகக் கைதிகள் நினைத்த நேரத்துக்குச் சென்று புத்தகத்தை எடுத்து வாசிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படுவதில்லை.
ஆனால் தற்பொழுது இரவு நேரத்தில் கூட சிறைக்கைதிகள் புத்தகங்களை எடுத்து வாசிக்கும் சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
இங்கிருக்கக்கூடிய கைதிகள் அனைவரும் வாசிப்பார்கள் என்று உறுதியாகக் கூறமுடியாது. ஒரு கைதி வாசிக்கும் பொழுது ஒருவரைப் பார்த்து மற்றவர் பழகுவார்.
அத்துடன், இலங்கையைப் பொறுத்தவரையில், குற்றம் இழைக்காவிட்டாலும் குற்றமிழைக்க
வைத்துவிடுவார்கள். இந்த நாட்டில் சட்டத்தை இயற்றுகின்ற இடம்தான்
பிரச்சினையாகவுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

பாகிஸ்தானின் ஒற்றை முடிவு... இந்தியாவின் Air India நிறுவனத்திற்கு பல ஆயிரம் கோடிகள் இழப்பு News Lankasri

பிறப்பிலேயே சக்திவாய்ந்த மற்றும் கவர்ச்சிகரமான ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

விருது வாங்க சென்ற இடத்தில் அஜித் மகனுக்கு அடித்த லக்.. குடியரசு தலைவருடன் லீக்கான புகைப்படம் Manithan
