இலங்கையில் மீண்டும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படலாம்...! வெளியான அறிவிப்பு
எரிபொருள் நெருக்கடி ஏற்படும் பட்சத்தில் தவிர்க்க முடியாத காரணத்தின் போது மின்வெட்டை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஏ.ராஜகருணா தெரிவித்துள்ளார்.
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (28) ஏற்பாடு செய்துள்ள சிறப்புச்செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றபோது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சுத்திகரிப்பு எண்ணெய்
எனவே எதிர்காலத்தில் நாட்டிற்கு வரவிருக்கும் எரிபொருள் கப்பல்களைக் கருத்தில் கொண்டு, போதுமான அளவில் கையிருப்பு இருக்கும்.

இருப்பினும், சுத்திகரிப்பு ஆலைக்குத் தேவையான எண்ணெய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. சுத்திகசுத்திகரிப்பு ஆலையிலிருந்து அதிக டீசலையும் எரிபொருள் எண்ணெயையும் உற்பத்தி செய்யும் நிலையில், சுத்திகரிப்பு எண்ணெய் தீர்ந்துவிட்டால், நாங்கள் நிச்சயமாக மின்வெட்டை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
இதன் காரணமாக எரிபொருள் எண்ணெய்க்கான ஏலம் கோரப்பட்டுள்ளநிலையில், இதுவரை கிடைக்கவில்லை என்றும் விளக்கமளித்துள்ளார்.
இதேவேளை, எரிபொருள் கப்பல்கள் அனைத்தையும் ஏப்ரல் மாதத்தில் எந்தப் பிரச்சினையுமின்றிப் பெற்றுக்கொள்ள முடியும். இவற்றில் எதுவும் போர்ப்பகுதிகளிலிருந்து அனுப்பப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.