ஹஜ் பெருநாளன்று பள்ளிவாசல்களில் மிருகங்களை கொல்வதற்கு அனுமதியில்லை
ஹஜ் பெருநாளன்று பள்ளிவாசல்களில் மிருகங்களை கொல்வதற்கு அனுமதியளிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹஜ் பெருநாளன்று முஸ்லிம்கள் மிருகங்களை கொன்று தானமாக வழங்கும் நடைமுறைக்கு இந்த ஆண்டு அனுமதி அளிக்கப்படாது என இஸ்லாமிய மத விவகார கலாச்சார திணைக்களம் மற்றும் வகுஃப் சபை என்பன தீர்மானித்துள்ளன.
இந்த விடயம் குறித்து அனைத்து பள்ளிவாசல்களுக்கும் இஸ்லாமிய மத விவகார, கலாச்சார திணைக்களத்தின் பணிப்பாளர் ஏ.பி.எம்.அஷ்ரப் எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.
பள்ளிவாசல் வளாகத்தில் மிருகங்களை கொலை செய்வதற்கு அனுமதிக்க வேண்டாம் என அறவர் அறிவுறுத்தியுள்ளார்.
எதிர்வரும் 21ஆம் திகதி ஹஜ் பெருநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில் அன்றிலிருந்து மூன்று நாட்களுக்கு இந்த தானம் வழங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
எவ்வாறெனினும், இந்த ஆண்டு 23ஆம் திகதி பௌர்ணமி தினம் என்பதனால் இந்த தானம் வழங்கும் நடவடிக்கை இரண்டு நாட்களுக்கு வரையறுக்கப்பட்டுள்ளது.




