பொலிஸாரை தவறாக சித்தரிக்கும் காணொளி குறித்து வெளியான தகவல்
எல்பிட்டியவில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட கலவரத்தின்போது பொலிஸார் கடுமையாக நடந்து கொண்டதாக சித்தரிக்கும் காணொளி ஒன்று வெளியிடப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
எனினும் பொலிஸாரின் நடத்தையை இந்த காணொளி தவறாக சித்தரிப்பதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஒரு பகுதியை இந்த காணொளி
காணொளியில் ஒரு அதிகாரி தனது வீட்டிற்குள் ஆக்ரோசமாக நடந்து கொண்ட ஒருவரை கட்டுப்படுத்தும் விதம் காட்டப்படுகிறது.
முன்னதாக அவசர இலக்கமான 119 மூலம் செய்யப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர்.
இதன்போது தாம் கைது செய்யப்படுவதை எதிர்த்த நபர் ஒருவர், குறைந்தபட்ச பலத்தைப் பயன்படுத்தி அடக்கப்பட்டதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் சந்தேக நபரை அடக்கி அமைதிப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியை இந்த காணொளி சித்தரிப்பதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் சம்பவத்தின் போது ஏதேனும் தவறான நடத்தை நடந்ததா என்பதை தீர்மானிக்க எல்பிட்டிய பிரதேச பொலிஸ் தரப்பு விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




