இலங்கை வரும் வெளிநாட்டவர்கள் தொடர்பில் புதிய கட்டுப்பாடு - பொலிஸார் விடுத்துள்ள அறிவிப்பு
வெளிநாட்டவர்களுக்கு வீடு அல்லது சொத்துக்களை வாடகை அடிப்படையில் வழங்குவதாயின், அது குறித்து உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் தெரியப்படுத்துமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அனைத்து வீட்டு உரிமையாளர்களுக்கும் இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் F.U.வுட்லரினால் விசேட அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
வாடகை வீடு
சுற்றுலா விசா மூலம் இலங்கை வரும் சில வெளிநாட்டினர், இவ்வாறான வாடகை வீடுகளில் தங்கியிருந்து பல்வேறு இணையவழி குற்றங்கள் மற்றும் நிதி மோசடிகளில் ஈடுபட்டு வருவதாக தற்போது தகவல்கள் வௌியாகியுள்ளன.

இதன் காரணமாக, இலங்கையின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், நாட்டில் இடம்பெறும் பாரிய அளவிலான நிதி மோசடிகளை கட்டுப்படுத்தவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய, வெளிநாட்டினருக்கு தங்களது வீடுகள் அல்லது தங்குமிட வசதிகளை வழங்கும் நபர்கள், இனிவரும் காலங்களில் இது குறித்து மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
நடிகர் ஜீவாவின் தந்தை, தயாரிப்பாளர் RB சவுத்ரி விபத்தில் மரணம்! அதிர்ச்சியில் சினிமா துறை Cineulagam