படகில் இந்தியா பயணிப்பவர்களுக்கு அரசாங்கம் விடுத்துள்ள அறிவிப்பு
இந்தியாவின் பாண்டிச்சேரியில் உள்ள காரைக்கால் துறைமுகத்திற்கும் யாழ்ப்பாணம் காங்கேசன்துறைக்கும் இடையிலான கப்பல் சேவை 2023 ஏப்ரல் 29 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இதனை அறிவித்துள்ளார்.
இந்த கப்பல் சேவையை ஐ.என்.டி.எஸ்.ஆர்.ஐ என்ற நிறுவனம் நடத்தவுள்ளது.
பயணிகளின் கவனத்திற்கு
படகுச்சேவை உரிமையாளர்களின் கூற்றுப்படி, ஒரு பயணத்திற்கு ஒரு பயணியிடம் 50 டொலர்கள் வசூலிக்கப்படும் அத்துடன் 100 கிலோ பொருட்கள் அனுமதிக்கப்படும். ஒரு கப்பலில் ஒரே நேரத்தில் 150 பயணிகளை ஏற்றிச் செல்லும் இந்த கப்பல் பயணத்துக்கு சுமார் 4 மணி நேரம் செல்லும்.
அதேநேரம் முதல் கட்ட நடவடிக்கைகளின் போது பகல் நேர சேவைகள் மட்டுமே
நடத்தப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.





கங்குவா படத்திற்கு பின் சிறுத்தை சிவா இந்த ஹீரோவைத்தான் இயக்கப்போகிறாரா.. லேட்டஸ்ட் தகவல் Cineulagam

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam
