தீவிரமடையும் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் தொற்று - இந்தியாவில் முதல் மரணம் பதிவு
இந்தியாவில் H3N2 வகை இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் பாதிப்பு காரணமாக, இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, முதல் மரணம் கர்நாடக மாநிலத்திலும், 2 ஆவது மரணம் அரியானா மாநிலத்திலும் பதிவாகியுள்ளன.
ஹாங்காங் காய்ச்சல் என்றும் அழைக்கப்படும், இன்ஃப்ளூயன்ஸா எச்3என்2 வைரஸால் பாதிக்கப்பட்ட 90 பேர் கடந்த காலங்களில் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளனர்.

நோய் அறிகுறிகள்
இந்த இன்ஃப்ளூயன்ஸா H3N2 வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, கோவிட் அறிகுறிகளுடன் பல ஒற்றுமைகள் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் காய்ச்சல், இருமல், சளி, தொண்டை புண், சுவாச பிரச்சினைகள் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகளையும் காட்டுகின்றன.
இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளவர்கள் முறையான சிகிச்சை எடுக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு ஐசிஎம்ஆர் அறிவுறுத்தியுள்ளது.
பிரித்தானிய அரசியலில் மாறிய காட்சிகள்: வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார் முன்னாள் துணைப்பிரதமர் News Lankasri
50 ஆண்டுகளின் பின் சனி ஜெயந்தியில் உருவாகும் ராஜயோகம்: இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
வருகிற ஞாயிற்றுக்கிழமை அன்று சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று பிளாக்பஸ்டர் திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam