இலங்கையில் பணவீக்கம் சடுதியாக உயர்வு!
இலங்கையில் பணவீக்கம் 74 சதவீதமாக உயர்ந்துள்ளதாக அமெரிக்காவின் ஜோன்ஸ் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஸ்டீவ் ஹாங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேராசிரியர் ஸ்டீவ் ஹான்கியின் கூற்றுப்படி, பணவீக்க உயர்வுக்கு ரூபாயின் பணமதிப்பிழப்பு முக்கிய காரணியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பேராசிரியரான ஸ்டீவ் ஹான்கி, நிதி நெருக்கடியில் உள்ள நாடுகளின் பொருளாதார காரணிகளைக் கருத்தில் கொண்டு இந்த ஆண்டு பணவீக்கக் குறியீட்டைக் கணக்கிட்டுள்ளார்.
மார்ச் மாதம் வெளியிடப்பட்ட கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் மூலம் அளவிடப்பட்ட உத்தியோகபூர்வ பணவீக்க விகிதமான 18.7 வீதத்தை விட ஹாப்கியின் பணவீக்கம் மூன்று மடங்கு அதிகமாகும்.
உத்தியோகபூர்வ பணவீக்கம் ஏப்ரல் 8ம் திகதி அடுத்த மூன்று மாதங்களுக்கு 28 வீதமாக இருக்கும் என இலங்கை மத்திய வங்கி கணித்துள்ளது.

பதினாறாவது மே பதினெட்டு 2 நாட்கள் முன்

அடுத்த 12 மணி நேரத்தில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி.., எந்தெந்த பகுதிகளில் மழை? News Lankasri
