இம்மாத முதன்மை பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு
கொழும்பு நுகர்வோர் விலை சுட்டெண் அடிப்படையிலான முதன்மை பணவீக்கம் இந்த மாதத்தில் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.
தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் மே மாத முதன்மை பணவீக்கம் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.
முதன்மை பணவீக்கம்
இதற்கமைய, கடந்த ஏப்ரல் மாதத்தில் மறை 2 சதவீதமாக நிலவிய கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான முதன்மை பணவீக்கம் இந்த மாதத்தில் மறை 0.7 சதவீதமாக அதிகரித்துள்ளது.

ஏப்ரல் மாதத்தில் மறை 3.6 சதவீதமாக இருந்த உணவல்லா பணவீக்கம் மே மாதத்தில் மறை 3.3 சதவீதமாக அதிகரித்துள்ளது.
அத்துடன், கடந்த ஏப்ரல் மாதம் 1.3 சதவீதமாக இருந்த உணவு பணவீக்கம் இந்த மாதத்தில் 5.2 சதவீதமாகப் பதிவாகியுள்ளதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
அய்யனார் துணை சீரியலில் பாண்டியின் புதிய கடையில் ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த பிரபலம்... யாரு பாருங்க, வீடியோ Cineulagam
பாண்டியன் மொத்த குடும்பத்தையும் போலீஸ் ஸ்டேஷன் அனுப்பிய மயில் அம்மா.... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam