நாடாளுமன்றுக்குள் உலாவிய தொற்றாளர்கள்! அதிகாரிகள் 25 பேருக்கு பி.சி.ஆர் சோதனை
நாடாளுமன்றத்தின் சபாநாயகர் அலுவலகம், தபால் அலுவலகம் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் போன்றவற்றில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நாடாளுமன்றத்தின் படைக்கள சேவிதர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
சபாநாயகரின் பாதுகாப்புப் பிரிவில் உள்ள பொலிஸ் சாரதி மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் என இருவருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்தே, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொரோனாத் தொற்றுக்குள்ளான பொலிஸ் அதிகாரிகள் சபாநாயகரின் அலுவலகம், தபால் அலுவலகம் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் போன்றவற்றுக்குச் சென்றுள்ளமை சி.சி.ரி.வி. காட்சிகளின் ஊடாகத் தெரியவந்துள்ளது.
இதன் காரணமாக குறித்த பொலிஸ் அதிகாரிகள் தொடர்புபட்ட 25 இற்கும் மேற்பட்ட நாடாளுமன்ற ஊழியர்களுக்கு நேற்று பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பரிசோதனை முடிவுகள் இன்று வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam