இலங்கையில் மூன்று கோவிட் தடுப்பூசி போட்டவர்களையும் விட்டு வைக்காத தொற்று
இலங்கையில் மூன்று கோவிட் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கும் தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போதைய நிலையில் PCR பரிசோதனைகள் தொடர்பில் ஆராய்ந்து பார்க்கும் போது நோயாளிகளில் 50 சதவீதமானோர் கோவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வைரஸ் மிகவும் வேகமாக பரவுவதாக பொது சுகாதார பரிசோதகர் எஸ்.ஏ.யூ.டீ.குலதிலக்க தெரிவித்துள்ளார்.
கட்டான சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 70 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் 49 பேர் கோவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களுக்குள் 3 தடுப்பூசிகளும் பெற்ற 40 - 60 வயதிற்குட்பட்ட ஆண் மற்றும் பெண்களும் அதிகளவில் இருப்பதாக பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.