யாழ். வல்லையில் சிறப்பாக இடம்பெற்ற இந்திரவிழா (Photos)
யாழ். வல்வெட்டித்துறை முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவின் கொடியிறக்க திருவிழாவின் இந்திரவிழா உற்சவம் நேற்று (05.05.2023) மிக சிறப்பாக இடம்பெற்றது.
இதில் வீதிகளில் வர்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட மின்விளக்குகள், கலைநிகழ்ச்சிகள், நடன ஆற்றுக்கைகள், கவியங்கங்கள், சொற் பொழிவுகள், புகைக்குண்டு ஏற்றல், வான வேடிக்கைகள் என்பன இடம்பெற்றன.
வீதி உலா
இதில் முத்துமாரியம்மன், விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை ஆகிய தெய்வங்களை முத்துப்பல்லாக்கில் பக்தர்கள் சுமந்த வண்ணம் வீதி உலா வந்தனர்.
இன்று (06.05.2023) அதிகாலையில் முத்துமாரி அம்மன், சமேதராக ஆலயத்தின் வந்தடைந்தனர்.
இதில் கலந்து கொண்ட பக்தர்கள் முத்துமாரியம்மனின் அருட்காடச்சத்தினை பெற்றுச் சென்றனர்.
யாழ். வெசாக் பூரணை தின நிகழ்வுகள்
யாழ். மாவட்ட பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் எற்பாட்டில் நேற்று (05.05.2023) வெசாக் பூரணை தின நிகழ்வுகள் யாழ். ஸ்ரீ நாகவிகாரையில் நடைபெற்றுள்ளது.
யாழ். மாவட்ட பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் A.G.சுரனபொதகொட தலைமையில் நடைபெற்ற இவ் நிகழ்வுக்கு, பிரதம அதிதியாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டிருந்தார்.
யாழ் பல்கலைக்கழக மாணவர்
இதில் மன்னார் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களும், யாழ் பல்கலைக்கழக மாணவர்களும் தமிழ், சிங்கள மொழி மூலமான பாடல்களை பாடினர்.
இதில் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணன் சிவபாலசுந்தரன், யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம பிரதீபன், மேலதிக அரசாங்க அதிபர் காணி முரளிதரன், யாழ் பிரதேச செயலாளர் எஸ்.சுதர்சன், யாழ். மாநகர சபை ஆணையாளர் ஜெயசீலன், யாழ். மாவட்ட பாதுகாப்புகட்டளைத் தலைமையகத்தின் கீழ் உள்ள கட்டளைபிரிவுகளின் மேஜர் ஜெனரல் உயர்அதிகாரிகள், மதத்தலைவர்கள் பார்வையாளர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் தங்க மயில் தங்க அன்ன வாகன உற்சவம்




