யாழில் உள்ளக விளையாட்டு அரங்கிற்கான அடிக்கலை நாட்டும் நிகழ்வு
விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் உள்ளக விளையாட்டரங்கினை பழைய பூங்கப் பகுதியில் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று முன்னெடுக்கப்பட்டது.
உள்ளக விளையாட்டு அரங்கிற்கான அடிக்கல்லினை அமைச்சர்கள் மற்றும் ஆளுநர் பாராளுமன்ற உறுப்பினர் ஆகியோர் நாட்டி வைத்தனர். அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாண பிரதேச செயலகத்தில் விருந்தினர்களின் உரைகள் இடம்பெற்றன.
கௌரவிப்பு
நிகழ்வில் தெற்காசிய ரீதியில் இடம்பெற்ற விளையாட்டுப்போட்டிகளில் பங்குபற்றிய வீரர்களுக்கு விருந்தினர்களால் பதக்கங்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
இதன்போது சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க, விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே, வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், பாராளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், மற்றும் விளையாட்டுத்துறை உத்தியோகத்தர்கள் விளையாட்டு வீரர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.





