இந்தோனேசியாவில் கட்டுப்பாட்டை இழந்த விமானம்: படுகாயங்களுடன் உயிர் தப்பிய பயணிகள்
இந்தோனேசியாவின் பப்புவா பிராந்தியத்தின் யாபின் தீவில் இருந்து தலைநகர் ஜெய்ப்பூராவிற்கு செல்ல தயாராக இருந்த திரிகானா ஏர் (Trigana Air) நிறுவனத்தின் ATR-42 விமானம் கட்டுப்பாட்டை இழந்து ஓடுபாதையில் இருந்து விலகி விபத்துக்குள்ளானதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விபத்துச் சம்பவம் நேற்று(09.09.2024) இடம்பெற்றுள்ளது.
மீட்பு பணிகள்
பப்புவா பிராந்தியத்தின் யாபின் தீவில் இருந்து தலைநகர் ஜெய்ப்பூராவிற்கு செல்ல ஓடுபாதையில் தயாராக இருந்த குறித்த ATR-42 விமானம் புறப்படும் போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து ஓடுபாதையில் இருந்து விலகி அருகிலிருந்த மரங்களின் புதர்களுக்குள் சென்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் உடனடியாக செயல்பட்டு, மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது, விபத்துக்குள்ளான விமானத்தில் ஒரு பெண் குழந்தை உட்பட 42 பயணிகள் மற்றும் ஆறு ஊழியர்கள் இருந்த நிலையில் அவர்கள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.
அத்துடன் விபத்தில் காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
மேலும், விபத்துக்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, ஆசியாவிலேயே மிக மோசமான விமான போக்குவரத்தை கொண்ட நாடு என்ற சாதனையை பெற்ற இந்தோனேசியாவின் விமான பாதுகாப்பு நெட்வொர்க் தரவுகளின்படி,1945 முதல் 100 க்கும் மேற்பட்ட விபத்துகள் இடம்பெற்றள்ளதுடன் அதில் 1,300க்கும் மேற்பட்ட பயணிகள் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 2015ஆம் ஆண்டு டிரிகானா ஏர் விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 54 பேரும் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

கண்டியில் சஜித்திற்கு ஆதரவாக நடத்திய மாவனெல்ல கபீர் கூட்டத்தில் குழப்பம்: கேள்விகேட்ட நபர் மீது தாக்குதல்





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 4 நாட்கள் முன்

நயன்தாராவுடன் தனது முதல் படத்தில் நடித்துள்ள மகாநதி சீரியல் நடிகர்.. அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam

இந்த 3 சூழ்நிலைகள்... இந்தியாவிற்கு எதிராக மீண்டும் அணு ஆயுத மிரட்டல் விடுத்த பாகிஸ்தான் News Lankasri
