இந்திய - இலங்கை வர்த்தக உறவுகள்: தமிழ்நாடு சிவசேனா தலைவர் பெறுமிதம்
இந்திய - இலங்கை உறவை வலுப்படுத்துவதற்காக பிரதமர் நரேந்திர மோடியும், இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும், வளமான, வலிமையான நடாக இலங்கையை உருவாக்க வேண்டும் என தமிழ்நாடு சிவசேனா மாநில செயல் தலைவர் க.சசிகுமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,
“பல்வேறு ஒப்பந்தங்களில் நரேந்திர மோடியும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் கையழுத்திட்டுள்ளனர்.
வீடு கட்டி கொடுக்கும் திட்டம்
இந்திய அரசும் பல கோடி நிதியை இலங்கை அரசுக்கு ஒதுக்கி உள்ளது, 10,000 பேர்களுக்கு வீடு கட்டி கொடுக்கும் திட்டம் மற்றும் பல வேறு திட்டங்களை இந்திய அரசு நடைமுறை படித்திக கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் இந்தியா, இலங்கை நல்லுறவை சீர்குலைக்கும் விதமாக, விஷத்தை கக்கி உள்ளார் இலங்கையின் கத்தோலிக்க கார்டினல் மல்கம் ரஞ்சித்.
இலங்கையில் இருந்து தமிழக பகுதிக்கு கப்பல் போக்குவரத்து, விமான போக்குவரத்தை விரிவுப்படுத்த இந்திய அரசு முக்கியதுவம் கொடுத்து வருகிறது. மேலும் இந்தியா-இலங்கை இடையே பாலம் அமைக்கப்பட்டால் இலங்கையின் இறையாண்மைக்கு பிரச்சினை சுதந்திரமும் பறிபோகும் என செய்தியை வெளியிட்டுள்ளார். இச்செய்தியை வண்மையாக கண்டிக்கிறேன்.