இண்டிகோ விமானத்தில் இரத்த வாந்தி எடுத்து பயணி உயிரிழப்பு
இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் இரத்த வாந்தி எடுத்து உயிரிழந்துள்ளார்.
மும்பையில் இருந்து திங்கட்கிழமை(21.08.2023) ராஞ்சிக்கு சென்ற இண்டிகோ விமானத்திலே இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
சிகேடி மற்றும் காசநோயால் பாதிக்கப்பட்டிருந்த 62 வயதான அந்த நபருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
திடீரென இரத்த உறைவு
அந்த பயணிக்கு திடீரென இரத்த உறைவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவசரகால சூழ்நிலையில் விமானம் நாக்பூரில் தரையிறக்கப்பட்டது.
விமான நிலையத்தில் அவர் இறக்கிவிடப்பட்ட பின்னர், பாதிக்கப்பட்டவர் உடனடியாக கிம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.
உடல் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வங்கதேசத்தில் பிரபல நடிகை கொலை வழக்கில் கைது: விமான நிலையத்தில் மடக்கி பிடித்த பொலிஸார் News Lankasri
