உணவு ஒவ்வாமையினால் பாடசாலை மாணவர்கள் 31 பேர் வைத்தியசாலையில் அனுமதி
நானுஓயா - கிளாசோ பிரதேச பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் 31 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாடசாலையால் இன்றையதினம்(28.04.2023) வழங்கப்பட்டுள்ள பகல் உணவின் காரணமாகவே குறித்த மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உணவு ஒவ்வாமை
மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உணவு ஒவ்வாமையினால் மயக்கம், வயிற்றுவலி மற்றும் குமட்டல் போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளன.
இதனால் பாதிக்கப்பட்ட 31 மாணவர்களும் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு எந்த மாணவரும் ஆபத்தான நிலையில் இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக செய்தி- திருமாள்





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 2 நாட்கள் முன்

சீனாவிற்கு கிடைத்த பேரிடி... ஐபோன் 17 உற்பத்தியை இந்த நாட்டிற்கு மாற்ற ஆப்பிள் திட்டம் News Lankasri

ட்ரம்பிற்கு கெட்ட செய்தி., அமெரிக்காவின் Patriot ஏவுகணைகளை தகர்த்தெறியும் ரஷ்யாவின் S-400 News Lankasri
