புலிகளுக்கு எதிரான போரில் இந்தியாவின் பங்களிப்பினை நினைவுகூர்ந்த லலித் வீரதுங்க
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட போரின்போது இந்தியாவின் பங்களிப்பு முக்கியமானது என கொவிட் தடுப்பூசி விநியோக நடவடிக்கைகளின் பிரதானி லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.
லலித் வீரதுங்க, தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக கடமையாற்றிய காலத்தில் அவரது செயலாளராக கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட கொவிட் தடுப்பூசிகளை ஏற்றும் அதிகாரபூர்வ நிகழ்வு இன்றைய தினம் அங்கொட தொற்று நோய் வைத்தியசாலையில் நடைபெற்ற போது இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுடனான நெருக்கமான உறவு போர் வெற்றிக்கு உதவியாக அமைந்தது என அவர் தெரிவித்துள்ளார். தற்போதைய ஜனாதிபதியும் அப்போதைய பாதுகாப்புச் செயலாளருமான கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவும் தாமும் இந்தியாவுடன் பல்வேறு பேச்சுவார்த்தைகள் நடாத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தற்பொழுது இந்தியா மற்றுமொரு போருக்கு உதவி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த போர் கொரோனா வைரஸிற்கு எதிரான போர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இந்தியாவிடமிருந்து தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதற்கு மிக முக்கியமான பங்களிப்பினை வழங்கியிருந்தார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்றைய தினம் 2430 பேருக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





தயவுசெய்து இந்த சீரியலை முடித்துவிடுங்கள், கதறும் சன் டிவி சீரியல் ரசிகர்கள்... அப்படி என்ன தொடர் Cineulagam

என் குழந்தைகளுக்கு தந்தை இல்லாமல் இருக்கலாம்... 40 வயதில் கர்ப்பமான நடிகை! வைரலாகும் நெகிழ்சி பதிவு Manithan

கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை ஒப்புக்கொண்ட ஆனந்தி, அருவாளை எடுத்த அவரது அப்பா.. சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam

10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri
