இராமாயணத்தில் கூறப்பட்டுள்ள இடங்களை பார்க்க வந்துள்ள இந்தியர்கள்
இராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இலங்கையில் உள்ள இடங்களை பார்ப்பதற்காக இந்திய சுற்றுலாப் பயணிகள் இன்று மதியம் இலங்கை வந்துள்ளனர்.
இலங்கையில் இராமாயண இடங்கள்

தேச மங்கையர்கரசி தலைமையில் இந்த சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ளனர்.இந்த இந்திய சுற்றுலாப் பயணிகள் இராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களை தவிர இலங்கையில் அமைந்துள்ள சைவ ஆலயங்களுக்கும் விஜயம் செய்ய உள்ளனர்.
அடுத்த ஆறு மாதங்களில் இப்படியான 800 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வரவுள்ளதாக இந்த சுற்றுலாப் பயணத்திற்கான ஏற்பாட்டுக்குழுவின் உறுப்பினரான லிடோன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

காணி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவின் வழிக்காட்டலின் கீழ், இலங்கை மற்றும் இந்தியா இடையில் ஒத்துழைப்புகளை அதிகரிக்கும் நோக்கில் இந்த சுற்றுலாப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிரபல நடிகரின் படத்தில் நாயகியாக நடிக்கப்போகும் சீரியல் நடிகை டெல்னா டேவிஸ்... பூஜை போட்டோ.. Cineulagam
Mad Max திரைப்பட பாணியில்... சவுதி ஆதரவுப் படைகளும் ஹவுதிகளும் பாலைவனத்தில் நேருக்கு நேர் News Lankasri