அவுஸ்திரேலியாவில் இந்திய இளைஞரொருவர் பரிதாபமாக மரணம்!
தெற்கு அவுஸ்திரேலிய சுற்றுலாத்தலமொன்றிற்கு கிறிஸ்மஸ் தின விடுமுறையைக் கழிக்கச்சென்ற இந்திய இளைஞரொருவர் நீரில் அடித்துச்செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
சுற்றுலாத்தலங்களில் ஒன்றான Port Elliott பகுதியில் குறித்த இளைஞன் நின்றுக்கொண்டிருந்த போது கரைக்கு வந்த பேரலையால் அடித்துச் செல்லப்பட்டு பின்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தியாவின் ஹைதராபாத்தைச் சேர்ந்த Sidhardha Reddy Vaddi (வயது 27 )என்ற இளைஞனே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
Port Elliott பகுதியில் அமைந்துள்ள Horseshoe Bay என்ற இடத்தில் கரையில் நின்றுகொண்டிருந்த இளைஞனை திடீரென்று வந்த பெரியதொரு அலை, பாறைகளுக்குள் இழுத்துச்சென்றுள்ளதாகவும், உயிர்காக்கும் படையினர் கடலில் பாய்ந்து இளைஞனைக் கரைக்குக் கொண்டுவந்தபோதும் அவர் உயிரிழந்துவிட்டார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
மேற்படிப்புக்காக 2020 இல் சிட்னிக்குப் புலம்பெயர்ந்த Sidhardha Reddy Vaddi, கடந்த நவம்பர் மாதம் வேலை கிடைத்து, தெற்கு அவுஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகருக்கு குடிபெயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்திய விமானியின் மனைவி வெளிப்படுத்திய தைரியம்: அக்கம் பக்கத்தினர் ஆச்சரியமடைந்த விடயம் News Lankasri
Bigg Boss 10: முதல் குறும்படத்தை போட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்! அதிரடி காட்டிய விஜய்சேதுபதி Manithan