பார்வையற்றோருக்கான உலகக் கிண்ணம்! வெற்றிவாகைசூடிய இந்திய அணி..
பார்வையற்றோருக்கான மகளிர் டி20 உலகக் கிண்ணத்தை இந்திய அணி வென்றுள்ளது.
பார்வையற்றோருக்கான மகளிர் டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இலங்கை மற்றும் இந்தியாவிலும் இடம்பெற்றது.
இந்திய அணி
இந்த தொடரின் இறுதி போட்டிக்கு இந்திய மற்றும் நேபாளம் ஆகிய அணிகள் முன்னேறி இருந்தன.
இரு அணிகளுக்குமான இறுதிப்போட்டி இன்று(23) இலங்கையில் நடைபெற்றது.

நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.
இதனையடுத்து முதலில் துடுப்பாடிய நேபாள அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 114 ஓட்டங்களை பெற்றது.
நேபாளம் அணியில் அதிகபட்சமாக சரிதா கிம்ரே 35 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்ததுடன், இந்திய அணி சார்பில் அனுகுமாரி, ஜமுனா ராணி தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.
இதனை தொடர்ந்து இந்திய அணி 12 ஓவரில் இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் புலா சரேன் அதிகபட்சமாக 44 ஓட்டங்களை பெற்றார்.
இதன் மூலம் பார்வையற்றோருக்கான மகளிர் டி20 உலகக் கிண்ணத்தை இந்திய அணி வென்றுள்ளது.
You May Like This..
சுட்டு வீழ்த்தப்பட்ட 100க்கும் அதிகமான உக்ரைனிய ட்ரோன்கள்: அமெரிக்க ஏவுகணை வீழ்த்திய ரஷ்யா News Lankasri
உண்மையை வீட்டில் கூறிய முத்து, ஷாக்கான விஜயா, ஆனால் ரோஹினி வைத்த டுவிஸ்ட்... சிறகடிக்க ஆசை பரபரப்பு எபிசோட் Cineulagam
பிரித்தானிய இராணுவ உதவியுடன் ரஷ்யா கொடியுடன் சென்ற எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா News Lankasri